கொரோனா லாக் டவுன் சம்பளம் குறைத்த விஜய்?

’மாஸ்டர்’ படம் நடித்து முடித்திருக்கும் விஜய் தனது 65 படமாக ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிக்க விஜய் 100 கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது.

தற்போதுள்ள கொரோனா லாக்டவுனில் பிஸ்னஸ் குறைந்தும் தெளிவில்லாமலும் இருக்கும் நிலையில் பல நடிகர்கள் சமபளத்தை குறைத்துள்ளனர். விஜய்யையும் சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் கேட்கப்பட்டதாம் அதையேற்று ரூ 20 கோடி சம்பளம் குறைக்க விஜய் சம்மதித்திருக்கிறாராம். மேலும் குறைக்க கேட்டபோது மறுத்து விட்டாராம். மலையாள திரையுலகில் நடிகர்கள் 50 சதவீதம் சம்பளம் குறைத்துக் கொள்வதாக கடந்த வாரம் தெரிவித்திரு ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
நடிகர் விஜய் தனது 64 வது படமாக ’மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். இதை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மாஸ்டர் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.