பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த‌ நடிகர் விஜய்..!

cxr2nabweaa_sh3

நடிகர் விஜய் இன்று சென்னை வடபழநியில் செய்தியாளர்களை சந்தித்து நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் மக்கள் பணம் இல்லாமல் கஷ்ட்டப்படுகின்றனர் அதை பார்த்தால் மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

நான் தொடர்ந்து செய்திகளை பார்த்து வந்தேன் அதில் ஒரு பாட்டி தன் பேத்தி கல்யாணத்துக்காக அவரது நிலத்தை விற்று கொண்டு வந்த பணம் செல்லாது என்று சொன்னவுடன் தற்கொலை வரை சென்றார் என்று கேட்டது மிகவும் வருத்தமாக இருந்தது.

cxr3h8pxeaeaxg2

நாட்டில் 20 சதவிகிதம் பணக்காரர்கள் இருப்பார்கள் அவர்களில் சிலர் செய்யும் செயலுக்காக அனைவரும் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது. நேற்று முதல் இந்த நோட்டு பிரச்சனை சகஜமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன்.

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் எடுத்த முடிவு யாரும் எடுக்க யோசிக்க முடியாத ஒன்று அதை மோடி அவர்கள் எடுத்தது வரவேற்கத்தக்கது. இந்த முடிவை எடுக்கும் முன் என்ன பிரச்சனையெல்லாம் வரும் என்று தெரிந்து அதற்கு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்பது என்னுடை தாழ்மையான வேண்டுகோள் என்று விஜய் கூறினார்.

பிரதமரின் இந்த நடவடிக்கையை ரஜினி, கமல், தனுஷ் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

அவர் அளித்த பேட்டியின் காணொலி உங்களுக்காக இதோ கீழே :-

[embedyt] http://www.youtube.com/watch?v=8xGG41JRnkE[/embedyt]

Leave a Reply

Your email address will not be published.