விஜய் சேதுபதியின் லாபம் டிரெய்லர் டிரெண்டிங் நம்பர் ஒன்.. 24 மணி நேரத்துக்குள் 30 லட்சம் பார்த்து சாதனை..

எஸ்பி,ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. விவசாயிகளை ஏமாற்றி விவசாயத்தை அழிப்பதுடன் அவர்களின் பொருட்களுக்கு சரியான விலை கொடுக் காமல் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ஹீரோயி னாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.


விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளி யானது. வெளியாகி 24 மணி நேரத்துக்குள் 3 மில்லியன் (30 லட்சம்) பேர் பார்த்துள்ள துடன் டிரெண்டிங்கில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
’புறம்போக்கு எனும் பொதுவுடமை’ படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதி கூட்டணி ’லாபம்’ படத்தில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.