விஜய் சேதுபதி வெளியிட்ட அக்‌ஷராவின் பட டைட்டில்..

 நடிகை அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

.
பட இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது:
எங்கள் படத்தின் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக எங்கள் படத்தலைப்பை வெளியிட்டு தந்த
விஜய் சேதுபதியின் எளிமையான பண்பு, எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி


சமூகத்தை பொறுத்தவரை “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு “ எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண் டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படு கிறது. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
இதில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி