எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதியின் 25 ஆவது படமான  சீதக்காதி படத்தின் டிரைலர் இன்று வெளியாகியிருக்கிறது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத்  திரைப்படம்  தரமான படம் என்ற பெயரையும் எடுத்தது.

இந்த நிலையில் இவர்கள் மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம், சீதக்காதி..  இப்படத்தில் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் ஐந்து பேர் நடிக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை என்று  கூறப்படுகிறது

மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் விஜய்சேதுபதி  அமர்ந்திருக்கும்  சீதக்காதி  முதல் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து கையில் வில்லுடன் வேடன் வேடத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல வெளியான போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம்,   டிசம்பர் வெளியீடு என்று விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

இந்த நிலையில் இன்று சீதக்காதி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி அய்யா என்ற திரைப்பட நடிகர் வேடத்தில் நடிக்கிறார். அதிரடியாக  தொடங்கும் ட்ரெய்லர் மெல்ல மெல்ல சோகத்தை எட்டுகிறது. இந்த அய்யா யார்  என்ற ஒரு எதிர்பார்ப்பை சீதக்காதி ட்ரெய்லர் ஏற்படுத்துகிறது.

நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ட்ரெய்லரில் யாருமே வரவில்லை. முழுக்க முழுக்க விஜய் சேதுபதிதான் ட்ரெய்லரில் இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாதான் இந்த திரைப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். அவரின் இசைக்கோர்ப்பு ரசிக்கவைக்கிறது.

@actorvijaysethupathi @seethakaathi @trailer @released

 

டிரெய்லர்: