விஜய்சேதுபதியின் ’96’ திரைப்படத்தின்’ பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக இணைந்து  நடித்துவரும் ‘96 ‘ என்ற  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 96 என்ற படத்தில், பிரபல நடிகர்  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதன்முறையாக முன்னணி நடிகை திரிஷா நடித்து வருகிறது..

இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.  இவர்களுடன்,  ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

You may have missed