சென்னையில் மரம் வைப்பேன்…..நடிகர் விஜய் கருத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை:

சென்னையில் மரங்களை வைத்து பச்சையாக மாற்றுவேன் என்று நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வர்தா புயலின் கோரதாண்டவத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சீரழிவை சந்தித்துள்ளது. ஆயிரகணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. அதேபோல் ஆயிரக கணக்கில் மிக பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டது. மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்கள் பொறுத்தி விடலாம். ஆனாய் சாய்ந்த மரங்களை நினைத்து இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. டுவிட்டரில்.. சென்னையில் மீண்டும் மரங்களை வைத்து பச்சையாக மாற்றுவேன்.. என தெரிவித்துள்ளார். விஜயின் இந்த அறிவிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.