பிட்பாக்கெட் காரனாக நடிக்கும் விஜய் வசந்த்..!

unnamed-1

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. அடுத்து தயாரிக்கும் படம் “ அச்சமின்றி “ விஜய்வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது :-

பிட்பாக்கெட் காரனாக சந்தோஷமாக வாழ்ந்து வரும் விஜய் வசந்தை. ஒரு கட்டத்தில் போலீஸ் உளவாளி என தவறாக புரிந்து கொள்கிறார் சிருஷ்டி டாங்கே. இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு சூழலில் ஏன் எதற்காக என்றே தெரியாமல் சில கும்பல்கள் அவர்களை துரத்துகின்றன. ஒரு புலனாய்வின் திருப்பத்தில். போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியையும் அதே கும்பல் துரத்துகிறது. மூவரும் சந்திக்கும்போது தங்களைத் துரத்துவதற்கான பின்னணியில் மிகப்பெரிய மனிதர்களின் சதியும், ஊழலும் இருப்பதும் தெரிய வருகிறது. அதை எப்படி அவர்கள் சமாளித்தார்கள், குற்றவாளிகளை எப்படி தண்டித்தார்கள் என்பது இந்த படத்தின் திரைக்கதை.

கல்வி முறையில் உள்ள ஊழல்களும், அரசியல்களும் எப்படி சமுதாயத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்ற கருத்தை ஒரு குற்றத்தின் பின்னணியில் விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளோம். அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை அச்சமின்றி தட்டிக் கேட்பதே “ அச்சமின்றி “ திரைப்படம்.

அச்சமின்றி திரைப்படத்தின் டிரைலர் உங்களுக்காக கீழே :-

[embedyt] http://www.youtube.com/watch?v=hOnV1mQzZAk[/embedyt]

You may have missed