நடிகர் விஜய் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த காட்சி (வீடியோ)

சென்னை:

மிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதுபோல அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர்  மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகர் விஜய். சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அது தொடர்வான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.