7 மொழி படத்தில் விஜய்ஜேசுதாஸ் ஹீரோ.. 3டி யில் உருவாகிறது..

மை டியர் குட்டிச்சாத்தான் படம் பல வருடங்களுக்கு முன்பு வந்திருந்தாலும் முப்பரிமான படமாக வந்து மறக்கமுடியாத படமாக அமைந்தது. அதன் பிறகு நிறைய படங்கள் வந்தன. ஒரு கட்டத்துக்கு பிறகு அதுபோன்ற படங்கள் வருவதில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முப்பரிமான படமாக உருவாகிறது சல்மான். இதில் ’படைவீரன்’ பட நடிகர் விஜய் ஜேசுதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். புது இயக்குனர் ஷலில் குமார் இயக்குகிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாப் என 7 மொழிகளில் இப்படம் வெளியாக விருக்கிறது.
சல்மான் படம் பற்றி விஜய் ஜேசுதாஸ் கூறும்போது, ’ இது திரில்லர் படம். துபாய். மலேசியா, குளுமனாலி, கேரளா, மற்றும் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. 3டி படமாக இது வெளிவரவிருக்கிறது’ என்றார்.