விஜய் நடித்த மாஸ்டர். சூர்யா நடித்த சூரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகி பாபு நடித்த காக்டெயில் உள்ளிட்ட படங் கள் படப்பிடிப்பு முடிந்தும் தியேட்டரில் திரையிட முடியவில்லை. இதில் பொன் மகள் வந்தாள், பெண்குயின், டேனி, காக் டெயில் படங்கள் ஒடிடி தளத்தில் வெளி யானது போல் சூர்யாவின் சூரரைப் போற்று, படம் ஒடிடி தளத்துக்கு வந்திருக் கிறது.
விஜய்யின் மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியாகும் என்ற வந்த வதந்திகளுக்கு பட தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போது புதுவிதமாக மாஸ்டர் படத்தின் போஸ்டரில் வேர்ல்ட் பிரிமியர் என்றும் நவம்பர் மாதம் 14ம் தேதி மாஸ்டர் ஒடிடி தளத்தில் வரும் என்பதுபோலவும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஒடிடி தளங்கள் வெளியிடுவதுபோல் இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இது தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களை யும் அதிர்ச்சியில் அடையச் செய்திருக் கிறது. ஆனால் இது ஃபேக் அதாவது போலி என்ற தகவலும் வலம் வருகிறது.