நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்!

சென்னை,

முன்னாள் ராணுவ வீரரும், நடிகரும், விக்ரமின் தந்தையுமான வினோத் ராஜ் நேற்று காலமானார். அவரது உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.

நடிகர் விக்ரமின் தந்தையான  80 வயதான வினோத்ராஜ்  முன்னாள் ராணுவ வீரர். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார். பல  தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில காலமாக படங்களில் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த அவர் நேற்று பிற்பகல் காலமானார்.

அவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருக்கிறது.

You may have missed