என் படத்தை வெளியிட உதவுங்கள் : விமல் வேண்டுகோள்

டிகர் விமல் நடித்து தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா.    பூபதி பாண்டிய இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ஆனந்தி, சாந்தினி, நாசர், ஜெயப்ரகாஷ், ரோபோ சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.     நீண்ட நாளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதே நேரத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் ஆகிய படஙக்ளும் வர உள்ளது.    அதனால் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படத்துக்கு திரை அரங்கம் கிடைப்பது சிரமமாக உள்ளது.   அதனால் விமல் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

விமல் தனது கடிதத்தில், “மரியாதைக்கும், பெரு மதிப்புக்கு உரிய வினியோகஸ்தர்களுக்கு திரையரங்க உரிமையாளர்களுக்கும் வணக்கம்.   உங்கள் ஆதரவால் உங்களில் ஒருவனாகிய நான் இதுவரை 24 படங்களில் நடித்துள்ளேன்.  எனது 25 ஆவது படமாக எனது தயாரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள மன்னர் வகையறா வெளி வர உள்ளது.

என்னுடைய இரண்டு ஆண்டு உழைப்பை இப்படத்துக்கு கொடுத்துள்ளேன்.   உங்கள் வீட்டுப் பிள்ளையான என் படம் வெளிவர நீங்கள் தான் உதவ வேண்டும்.   பெரிய படங்களுக்கு இடையில் வெளியாகும் எனது  மன்னர் வகையறா படத்தை  உங்கள் திரையரங்கில் வெளியிட்டு எனக்கு உதவ வேண்டும்.   உங்கள் அன்பையும் ஆதரவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”  என குறிப்பிட்டுள்ளார்.