நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா(பிரியதர்ஷினி ) வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி. விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும் நடிகர்-தயாரிப்பாளர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனுவை ஒப்படைத்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் போது, தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் கிருமிநாசினி தெளித்தார் விமல் . 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி அக்‌ஷயா ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதை நினைவுக் கூர்ந்து பாராட்டியிருந்தார்.