நெடுவாசலைக் காக்க திரையுலகினர் போராட்டம்!:  விஷால் அதிரடி அறிவிப்பு

றைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் ‘ஒரு கனவு போல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

விழாவில் நடிகர் சார்லி, விஷால்,  இயக்குநர் பேரரசு உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விஷால் பேசும்போது, “பொதுவாக நான் இசை வெளியிட்டு விழாக்களில் கலந்து கொள்ளவதில்லை. இந்த படத்தின் நாயகர்கள்  சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் நடிகர் சங்கம் சார்பான ஏதாவது ஒரு விஷயம் என்றால்  ஓடோடி வந்து முன்னால் நிற்பார்கள். அவர்கள் அழைத்ததால்தான் வந்தேன். இதைக் கேள்விப்பட்டு நாளைக்கு ஆரியா, ஜெயம் ரவி,கார்த்தி, ஜீவா எல்லோரும் என்னைக் கழுவி, கழுவி ஊத்தப் போகிறார்கள்” என்று ஜாலியாக பேச ஆரம்பித்தார்.

 

 

பிறகு ஆவேசமாக, “நான் இப்போது நடிகனாகவோ, நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை. ஒரு மனிதனாகவே பேசுகிறேன். நெடுவாசல் காப்பாற்றப்பட வேண்டும்.

விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் நாம் காப்பாற்ற வேண்டும்” என்றவர், “அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும்  களம் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.