நடிகர் விஷால் பிறந்தநாள்: 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

சென்னை:

டிகர் விஷாலுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அதையொட்டி  இன்று  பிறந்த 20  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

விஷால் பிறந்தநாளையொட்டி, நேற்றே அவரது ரசிகர் மன்றங்கள் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. நலத்திட்டங்கள் அனைத்திற்கும் விஷாலே நேரடியாக சென்று தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரம் அணிவித்த காட்சி
குழந்தைக்கு விஷால் தங்க மோதிரம் அணிவித்த காட்சி

இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. நடிகர் விஷால் கலந்து கொண்டு உதவியை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

விஷாலுடன், நடிகை வரலட்சுமி, நடிகர் சவுந்தரராஜா மற்றும் விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.