ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி?

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் வரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கந்துவட்டி காரணமாக தொடர்ந்து வரும் தற்கொலைகள் போன்றவற்றில், அரசுக்கு எதிராக சமீபகாலமாக நடிகர் கமலஹாசன், விஷால் போன்றோர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை களமிறக்க திரையுலகினர் முடிவு செய்துள்ள கோலிவுட் வட்டார தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷால் ஏற்கனவே திரையுலகில் நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை களமிறக்க நடிகர் கமலஹாசனும் விரும்பு வதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கோடம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.