ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டி….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:

ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷூ, அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் களமிறங்குகின்றனர். இவர்களோடு நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார். வரும் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.