பிரபல தமிழ் நடிகரான விஷாலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவருக்கு மனைவியாக உள்ள பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

விஷாவின் திரைப்பட அலுவலகமான பிரைடே சினிமாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் விஷால் திருமணம் செய்ய உள்ள படத்தை வெளியிட்டு உள்ளது. அதில் விஷாலும், அவர் கட்டிக்கப் போகும் பெண்ணும் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கத் தலைவராகவும்  இருந்து வருகிறார். இவர் சரத்குமார் பெண்ணான வரலட்சுமியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காதலில் பிரிவு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, விஷாலுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவரது பெற்றோர் தீவிரமாக மேற் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ஆந்திராவில் அவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷா என்பவரை மணமகளாக தேர்வு செய்துள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், தற்போது புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே விசால், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்தே திருமண தேதியை முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.