ஆர்கே நகரில் நடிகர் விஷால் வேட்பு மனு ஏற்பு

சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நடிகர் விஷால் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் விஷால் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. அப்போது முன்மொழிந்தவர்களின் விபரங்களில் ஏற்பட்ட குளறுபடியால் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் அலுவலர் வேலுச்சாமி உத்தரவிட்டார்.

முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறி விஷால் தேர்தல் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மீண்டும் அவரது மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அலுவலர் மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து விஷாலும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.