விஷால் வீட்டில் விரைவில் டும் டும் டும்…!

vishal
நடிகர் விஷால் மற்றும் அப்பா, அம்மா, தங்கை

நடிகர் விஷால் நான் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தில் தான் என்னுடைய திருமணம் நடக்கும் அதுவரை எனக்கு திருமணம் இல்லை என தெரிவித்திருந்தார்.. அப்ப யாருக்கு டும் டும்ன்னு கேக்குறீங்களா அட அவருடைய தங்கை ஐஸ்வர்யாவுக்குத்தான். இவரை பல இயக்குனர்கள் அவர்களுடைய‌ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்ய அவரை அணுகியும் அவருக்கு கதாநாயகியாக ஆசையில்லாததால் இவருக்கு இப்போது திருமணம் செய்ய அவரின் வீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் மாப்பிள்ளை வீட்டார் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தாலிக்கு சிறப்பு பூஜை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ நிறுவனம் ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் விஷாலில் வீட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த செய்தி அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது.