நடிகர் விஷால் மிரட்டுகிறார்: ‘ஸ்ரீலீக்ஸ்’ ஸ்ரீரெட்டி முகநூலில் பதிவு

சென்னை:

தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து உள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகிலும் புயலை கிளப்பி வருகிறார்.

தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தனக்கு பட வாய்ப்பு தருவாக ஏமாற்றி தன்னை உபயோகப்படுத்திக் கொண்டனர் என்று கூறி,  இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயர்களை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். மேலும் பல தகவலைகளை வெளியிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார்.

இது தமிழக திரையுலத்தினரிடையே கிலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகர் விஷால் தன்னை மிரட்டுகிறார் என்று மீண்டும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் கருப்பு பக்கங்களை வெளிக் கொண்டு வருவேன் என்றும்  ஸ்ரீரெட்டி,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.