நடிகர் விசாலுக்கு திருமணம்

நடிகர் விசால் ஆந்திராவைச் சேர்ந்தப் பெண்ணை மணக்க இருக்கிறார்.

பிரபல தமிழ் நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் கூறப்பட்டது.  இடையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே விசால், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஷாலுக்கு  அவரது பெற்றோர் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷா என்பவரை மணமகளாக தேர்வு செய்துள்ளனர்

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அன்று திருமண தேதியை முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.