சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தாக்கலான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

விஷால்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.மு.கவும் தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது.

இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்தார். விஷாலை முன்மொழிந்தவர்கள் விவரம் சரியாக மனுவில் குறிப்பிடபடவில்லை.

10 பேர் முன் மொழிய வேண்டும். ஆனால் முன் மொழியாதவர்கள் 2 பேரின் பேர் அந்த மனுவில் இடம் பெற்று இருந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கபட்டது. இதேபோல் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.