சேலம்

சேலம் அம்மாபேட்டை தனியார் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு பேரணியில் உண்மையான பிக்பாஸ் கலாம் தான் என்று நடிகர் விவேக் ,அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பல இளைஞர்களுக்கு தெம்பூட்டும் சக்தியாகத் திகழ்ந்தவர். அவர் இஸ்ரோவில்  விஞ்ஞானியாக பணியாற்றியவர். அனைவராலும் நேசிக்கப்பட்ட மகத்தான தலைவராகத் திகழ்ந்தார்.   அவர்  2015ஆம் ஆண்டு ஜூலை மாதம்  27ஆம் தேதி காலமானார்.

அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக ராமேஸ்வரம் அருகே உள்ள  பேய்க்கரும்பு என்னும் இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று,  பிரதமர் நரேந்திர மோடி அந்த மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.

அப்துல் கலாம் நினைவாக சேலம் மாநகரில் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் நினைவு பேரணி நடைப்பெற்றது.   இந்த பேரணிக்கு சிறப்பு விருந்திராக நடிகர் விவேக் அழைக்கப் பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ” அப்துல் கலாம் தான் நமக்கு உண்மையான பிக்பாஸ்”. நான் நமது  கலாம் ஐயா  நினைவாக பசுமை கலாம் என்ற பெயரில் சுமார்  ஒரு கோடி மரங்கள் தமிழ்நாடெங்கும்  நடத திட்டமிட்டுள்ளேன்.” என்று கூறினார்.