நடிகர் சங்க நில மோசடி: சரத்குமார், ராதாரவிக்கு எதிராக போலீசில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

--

சென்னை:

டிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில், அதற்கான ஆவனங்களை காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரடென்ட் அலுவலகத்தில் தறபோதைய நடிகர் சங்க தலைவர்  நாசர் சமர்ப்பித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவில் அனுமதி பெறாமல் விற்பனை செய்த சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, வேங்கட மங்கலம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை, சங்க பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர்கள், ராதாரவி, சரத்குமார் உட்பட, நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கிலும் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நில விற்பனை புகார் தொடர்பான  ஆவணங்களை, நடிகர் சங்க தலைவர் நாசர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் இன்று சமர்பித்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.