நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, குஷ்பு உள்பட திரையுலகினர் வாக்கை பதிவு செய்தனர்…

சென்னை:

மிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதுபோல அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக சொல்லிவரும்  நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டன் அருகே ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் .

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்குகளை பதிவு செய்தனர்.. அவருடன் அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். அப்போது அவருடைய ரசிகர்கள் குவிந்தனர். தலைவா தலைவா என்று சத்தமிட்டு உற்சாகம் அடைந்தனர்.


சென்னையில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகர் விஜய். சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார் .

நடிகர் சிவகுமார் தனது குடும்பத்திருடன் வந்து தி.நகர் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். அவருடன் அவரது மகன்  நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் வந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

 

 

 

கார்ட்டூன் கேலரி