சென்னை:

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  நடிகர் ஸ்ரீகாந்த் தனது வாக்கை செலுத்தவில்லை, அவரது விரலில் மை மட்டும் வைக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 18ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, தமிழகத்திலும், 38 நாடாளுமன்ற தொகுதி,  18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஏராளமானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரபல நடிகர்களான சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், ரமேஷ்கண்ணா போன்றவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, தேர்தல் ஆணையத்தின்மீது குற்றச்சாட்டுக்களை வீசியிருந்தனர். அதுபோல, கன்னியாகுமரி தொகுதியிலும் சுமார் 4000  பெயர்கள் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட்டிருக்கிறார், அவரை வாக்க ளிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்க ளிக்கவில்லை என்றும் அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் எனவும் விளக்கமளித்தார்.

நாளை   வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும், மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி புகுந்த விவகாரம் குறித்து,  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணைநடத்தி உள்ளா. அவர் இன்று தேர்தல் ஆணையத்தில் அறிக்கை அளிப்பார் . அது தலைமை   தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். என்ன நடவடிக்கை என்பது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.