சிரஞ்சீவியின் சகோதரர் நடிகர் நாகபாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி..

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. இவரது சகோதரர் நாக பாபு. தெலுங்கில் பல படங் களில் நடித்திருக்கும் நாக பாபு தமிழில் வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மகள் நிஹரிகா. தெலுங்கு படங்களில் நடித் துள்ள இவர் தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார்.


சமீபத்தில் தான் நிஹாரிகாவுக்கு திருமணம் நடந்தது. இதில் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள்.


நாக பாபு சமீபத்தில் தெலுங்கி டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதைய டுத்து அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான ஜூரம். இருமல் சளி தொல்லை ஏற்பட்டதால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். அதில் கொரோனா பாசிட்டிவ் என தெரிந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்ப டுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்.