நடிகை அதிதி மேனனுக்கு மதுரை குடும்ப நல கோர்ட் கண்டிப்பு! வீடியோ

மதுரை:

டிகர் அபி சரவணனுடன் காதல் திருமணம் செய்து, பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து விவாகரத்து கோரியிருக்கும் நடிகை அதிதி மேனனை மதுரை குடும்ப நல கோர்ட்டு கண்டித்துள்ளது.

விவாகரத்து வழக்கில் ஆஜராகமல் டிமிக்கி கொடுத்து வரும் அதிதி மேனன், தனக்கு மிர்னா எனற வேறு ஒரு பெயரை சூட்டிக் கொண்டு மலையாள திரையுலகிற்குச் சென்று விட்டார். மதுரை குடும்ப நல கோர்ட்டில் ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் அதிதி ஆஜராகமல் டிமிக்கி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 1ம் 2019) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் அபிசரவணனும், அதிதி மேனனும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். நீதிபதியை சந்தித்த அதிதி மேனன் தரப்பு, இந்த வழக்கில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இயலாது என்றும், ஐகோர்ட் மூலம் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் கோபமடைந்த நீதிபதி, அதிதியை கடுமையாக கண்டித்துள்ளார். இது குடும்ப நல கோர்ட். கண்டிப்பாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார் அதிதி மேனன்.

முகத்தை மூடிக்கொண்டு கோர்ட்டுக்கு வந்த அதிதி மேனன் – வீடியோ

-பொதிகை குமார்

present today to the – Video

கார்ட்டூன் கேலரி