உலகில் அதிக மழை கொட்டும் சிரபுஞ்சியில் ’நோ என்ட்ரி’ திகில் ஷுட்டிங்..

மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி உலகில் அதிக மழை பெய்யும் இடம். முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள் ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ தயாரித் துள்ளவர். ஆர்.அழகு கார்த்திக் இயக்கி உள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகர னிடம் சினிமா கற்றவர். பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

 


படத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது:

மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள் .அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானை யையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக் குக் கொடூரமானவை. நர வேட்டை யாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் கதைதான் ‘நோ என்ட்ரி’ படம்

இவ்வாறு இயக்குனர்  கூறினார்

இப்படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் தைரியசாலியாக நாய்களுடன் போராடும் காட்சிகளில் நடித்திருக் கிறார். ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ் , ஆதவ் கண்ண தாசன்,டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்காகப் பயிற்சி அளிக்கப் பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழ் சினிமா காணாத ஆபத்தான மலைப்பிரதேசக் காட்சிகளையும் பசுமைக் காட்டு வெளிகளையும் நான் இது தொடர்பான காட்சிகளையும் சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முகாமிட்டுப் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி. இசை -அஜிஸ். பாடல்கள் கு.கார்த்திக். எடிட்டிங் பிரதீப் இ ராகவ். நடனம்- மானஸ். சண்டைக்காட்சிகள் .ஜி.என். முருகன். வசனம் செந்தில் குமார். கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர். அழகு கார்த்திக் .
படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு உருவாகி வருகின்றன. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.