மிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் ‘வாடிவாசல்’ படமும் அடங்கும். இப்படத்தின் படப் பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றாலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஜல்லிக்கட்டு காளைகளுடன் அவர் இருந்த படங்கள் லைக்குகளை அள்ளியது.


வட சென்னை படத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் இணைந்த நடிகை ஆண்ட்ரியா மீண்டும் வாடிவாசல் படத் தில் இணைகிறார் என்று தகவல் பரவி வருகிறது. இதன்மூலம் சூர்யா படத்தில் முதன்முறையாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார்.
இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தமிழ் எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவலின் உரிமையை தயாரிப்பாளர் பெற்றிருந்தார். மேலும், தலைப்பு குறிப் பிடுவது போல, இந்த படம் தமிழ் நாட்டின் பண்டைய விளையாட்டான ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டது.