நடிகைக்கு பாலியல் தொல்லை.. பெயர் வெளியிட்டு லெப் ரைட் வாங்கினார்..

துவும் நடக்கலாம் என்ற படத்தில் நடித்தவர் அபர்ணா நாயர். மதுரன் நரங்கா, கல்கி உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இணைய தள டுவிட்டர் பக்கத்தில் நபர் ஒருவர் அபர்ணாவுக்கு ஐ லவ் சொல்லி ஆபாசமான வார்த்தைகளில் கமெண்ட் பகிர்ந்தார். அதைக்கண்ட அபர்ணா அந்த நபரின் மெஜேஜையும் அவரது புகைப் படத்தையும் அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டதுடன் பதில் அளித்திருந்தார். அதில்,’இணைய தளத்தை நான் மற்றவர் களுடன் கலந்துரையாட பயன்படுத்தி வருகி றேன். யாருடைய ஆசையையும் தீர்த்து வைப் பதற்காக அல்ல. என்னைப்பற்றி அப்படி நினைத்தால் அது தவாறனது. நீங்கள் உங்கள் மகளை அணைத்திருப்பதை பார்த்தேன். நானும் உன் மகள்போல்தான். என்னை அணைக்க நினைத்தால் அதற்கு முன் உங்கள் மகளை நினைத்துக்கொள்ளுங்கள்’என்றார் அபர்ணா நாயர்.