நடிகை பானுப்பிரியாவின் முன்னாள் கணவர் காலமானார்

கணவருன் பானுப்பிரியா (பழைய படம்)

பிரபல நடிகையான பானுப்பிரியாவின் முன்னாள் கணவர் ஆதர்ஷ் கவுசல் மாரடைப்பால் காலமானார்.

1990களில் தமிழக திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த நடிகை பானுப்பிரியா 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவருடன் சில ஆண்டுகாலம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கைக்குழந்தையுடன் மீண்டும் தமிழகம் வந்து குடியேறினார். அதைத்தொடர்ந்த 2005ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது.

இந்நிலையில், தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வசித்து வந்த ஆதர்ஷ்  கடந்த மாதம்  20 ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக  அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.