எனக்கு முக்கியத்துவம் இருந்தால் நான் நடிப்பேன் – பாமா

actress-bhama-patrikai

தமிழில் “எல்லாம் அவன் செயல்”, “சேவற்கொடி” ஆகிய படங்களில் நடித்த பாமா அதன் பின் தமிழிலும், மளையாலத்திலும் முக்கியதுவம் கொடுக்கப்படாததால் கன்னடத்துக்கு தாவினார். அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான ” மால்குடி டேய்ஸ்” அங்கு சக்கை போடுபோட்டது அதன்பின்பும் அவர் எந்த கன்னட திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

இதனால் சிலர் அவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்று புரளி பரப்பினர். அப்போது அவரை தொடர்பு கொண்டு கேட்டப்போது நான் சினிமாவிலிருந்து விலகவில்லை அதுமட்டுமின்றி என்னுடைய திருமணத்தை பற்றி கூட மூன்று வருடங்கள் கழித்து தான் யோசிப்பேன் என்றார். அதேபோல் நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரம் என்றால் உடனடியாக என்னுடைய கால்ஷீட்டை கொடுப்பேன் என்றார் பாமா.