நடிகை பாவனாவின் திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

டிகை பாவனாவின் திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகை பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘தீபாவளி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக வலம் வந்தார். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே அவரது வாழ்வில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க.. மனத்துணிவுடன் எதிர்கொண்டு வெளியே வந்தார்.  அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது ஆறுதலாக உடன் இருந்தவர், அவரது காதலன் நவீன்.

அதற்கு முன்னதாகவே இருவருக்கும் திருமணம் நடத்தி இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இடையில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் பாவனா, மனம் புண்பட்டிருந்தார். ஆகவே திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாவனா –  நவீன் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.  இம்மாதம் 22ம் தேதி நடக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 22ம் தேதி கொச்சியில் நடக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இன்னும் ஒரு மாதம் கழித்து பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால் என்ன.. பாவனா – நவீன் இருவருக்கும் இப்போதே அட்வான்ஸ் திருமணம வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.