நடிகை பாவனா பாலியல் வழக்கு: நடிகர் திலிப், காவ்யா தலைமறைவு!

திருவனந்தபுரம்,

டிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பிரபல மலையாள ‌நடிகர் திலீப்பும், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனும் விரைவில் கைது‌செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக  இருவரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ம் தேதி கடத்தப்பட்டு 2 ‌மணிநேரம் காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் தெரிவித்த தகவலை தொடர்ந்து,  நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால்,  தன்மீதான புகாரை திலீப்  வருகிறார்.

மேலும் திலீப்பின்  நண்பர், மேலாளர் ஆகியோரிடமும்  காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதா‌க கூறப்படும் நிலையில், பல்சர் சுனில், சிறையில் இருந்தபடி திலீப்பின் மேலாளருக்கு நெருங்கிய நபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகர்  திலீப்பும், காவ்யா மாதவனும்  விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று கேரள காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்ற‌ன.

இதன் காரணமாக  இருவரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed