கவர்ச்சி நடிகைக்கு திடீர் திருமணம்.. ’ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும்’

டந்த  2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அதற்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.


பூனம் தனது இணைய தள பக்கத்தில் அரை நிர்வாண படங்கள் வெளியிட்டு ரசிகர்களிடம் டோஸ் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் கடந்த ஜூலை மாதம் நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது பூனம் பாண்டே – சாம் பாம் பேவுக்கு திருமணம் நடந்துள்ளது.


திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார். அவர் களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித் திருக்கின்றனர்.
கணவருடன் பூனம் பாண்டே இருக்கும் திருமண படங்கள் சமூக வலைத் தளத்தில் பரவி வருகிறது.