மூத்த நடிகை ஜெயந்தி சில தினங் களுக்கு முன் மூச்சு திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நிலைமை மோசமாக இருந்ததால் உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனிருந்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க டாக்டர்கள் கூறிய போது அவரது மகன் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயந்தி கடந்த 14 வருடமாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச் சையில் அவரது உடல்நிலை தேறி வருகிறது. ஒரு சில நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
நடிகை ஜெயந்தி எம்ஜிஆருடன் முகராசி படத்தில் நடித்ததுடன் பாமா விஜயம், நீர்க்குமிழி போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி என 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.