கொரோனா ஊரடங்கால் திரையரங்கு கள் மூடிக்கிடக்கின்றன. தமிழ் உள்ளிட்ட எந்த மொழிப்படமும் வெளியிட முடியாத சூழல் உள்ளது. இதனால் பிரபல நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் அமேசான் பிரைம். நெட்பிளிக்ஸ். ஹாட் ஸ்டார் போனற தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட படங் களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். அவரது மனைவி நடிகை ஜீவிதாவும் தப்புக்கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களது மகள் ஷிவாமிகா. தெலுங்கில் ’தொரசானி’ தெலுங்கு படம் மூலம் அறிமுகமா னார். இவர் நடிக்கும் புதிய படம் தெலுங்கில் 90 சதவீதம் முடிவடைந்தி ருக்கிறது. இப்படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யமுடிவு செய்துள்ளனர். இப்படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.