பிரபல நடிகை காஜல் அகர்வால் மேனேஜேர் போதைப்பொருள் வழக்கில் கைது

 

பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காஜல் அகர்வால் தமிழ்த் திரையுலகிலும் புகழ் பெற்வறர். ஏற்கெனவே அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். தற்போது விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மேனேஜராக வெகுநாட்களாக பணிபுரிந்து வருபவர் ஜானி ஜோசப் என்கிற ரோனி.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலர், காவல்துறையின் சந்தேக வட்டத்தில் சிக்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜோசப் என்கிற ரோனியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டிற்குள் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரோனிக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும்  உல்ல தொடர்பு குறித்து அவரிடம் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை செய்து வருகிறார்கள்.