மலையாளத் திரையுலகின் மூலமாகி அறிமுகமாகி தமிழில் ‘கண்ணுக்குள் நிலவு’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கல்யாணி.

தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.

‘K2K புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குநர் – தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார் .

‘K2K புரொடக்‌ஷன்ஸ்’ சார்பாக அவரது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்கள் .

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.