பாலிவுட் நடிகர்கள் பார்ட்டியில் போதை மருந்து இலவசம்.. அப்பலப்படுத்தும் கங்கனா..

டிகர் சுஷாந்துக்கு ஆபத்தான போதை மருந்தை காதலி ரியா கொடுத்து அவர மரணத்துக்கு வழி வகுத்திருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்ததை யடுத்து அவரை கைது செய்ய சுஷாந்த் தந்தை கேகே சிங் கூறி உள்ளார். இதையடுத்து ரியா மீதுபோதை மருந்து தடுப்பு பிரிவினர் போதை மருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பாலிவுட்டில் போதை மருந்து கலாச்சாரம் பற்றி நடிகை கங்கனா ரனாவத் கூறியிருந்ததாவது:
மினுமினுக்கும் பாலிவுட் டில் அடிக்கடி நடிகர் வீடுகளில் பார்ட்டி நடக்கும். இதில் பிரபலங்கள் கலந்துகொளவார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் கொக்கைன் போதை மருந்து பயன்படுத்தப்படு கிறது,விலை உயர்ந்த போதை மருந்தான இதனை ஸ்டார்கள் பார்ட்டிகளில் இலவசமாக வழங்கப் படுகிறது.
பெரிய பார்ட்டிகளில் போதை கும்பல் கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். இதுபற்றி போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். இதில் என் தொழிலுக்கு மட்டுமல்ல என் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். சுஷாந்துக்கு சில கொடூரமான உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப் பட்டார்.
பாலிவுட்டில் போதை பொருள் விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தால் பல பிரபலங் கள் சிக்குவார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி பலிவுட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கங்கனா தெரிவித்திருக்கிறார்.