டாப்ஸி-கங்கனா மோதல்.. பி கிரேட் நடிகை என விளாசல்..

--

டிகை டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கர் இருவரையும் பி கிரேட் நடிகை என்று கங்கனா ரனாவத் தாக்கினார்.
நடிகர் சுஷாந்த் தற்கொலை பற்றி கருத்து சொன்ன கங்கனா ரனாவத்தை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். மணாலியில் இருப்பதால் தன்னால் வரமுடியது என்று கங்கனா கூறினார்.


மேலும் ’பாலிவுட் பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரை போலீஸார் அழைத்து விசாரிக்க வேண்டும். இங்குள்ள நடிகைகள் டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் கரண் ஜோஹரை பிடிக்கும் என்று நாளையே சொல்லலாம். அலியாபட், அனன்யா பாண்டேவைவிட அழகாக இருந்தும் இன்னும் டாப்ஸியும். ஸ்வராவும் பி கிரேடு நடிகைகளாக இருக்கிறார்கள்’ என்றார்.
இதற்கு பதில் அளித்த டாப்ஸி கூறியதாவது: ’பத்தாவது, 12வது கிரேட் ரிசல்ட் எங்களுக்கு வந்து விட்டது. இப்போது ஒரு அதிகாரபூர்வ கிரேட் தருகிறார்கள். இதற்கு முன் நாங்கள் நம்பர் ஒண்ணா, நம்பர் டூவா?.


வாரிசுகள் பெயரைச் சொல்லி சிலர் எதிர் மறையாக பேசி பயமுறுத்துவதால் வெளி யிலிருந்து திறமையான நடிகர்கள் பங்களிப்பை இந்தியா சினிமாவுக்கு வந்து அளிக்க முடியாதபடி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.