ரூ 1 லட்சம் மின்கட்டணத்தால் நடிகை கார்த்திகா அதிர்ச்சி..

பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர். கோ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை. வா டீல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


கார்த்திகாவுக்கு மின் கட்டணமாக சுமார் ரூ 1 லட்சம் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்தார். கோபம் அடைந்த அவர் டிவிட்டரில் விளாசி னார். ’மும்பையில் இது அதானி குழுமத்தின் என்ன விதமான மோசடி என்று புரியவில்லை. லாக் டவுனில் மீட்டர் ரீடிங் எடுக்காமல் தோராயமாக ஜூன் மாத மின்கட்டணம் ரூ. 1 லட்சம் எனக் கூறப்பட்டிருக்கிறது. நகரில் இதுபோல் பலரிடமிருந்து புகார்கள் வந்திருக்கிறது என அறிகிறேன். உடனே இதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார் கார்த்திகா.
சென்ற மாதம் நடிகர் பிரசன்னா, சினேகா வீட்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததில் ஷாக் ஆகி மின்துறைக்கு புகார் அளித்தனர்.