இந்த பிக் பாஸ் டீமில் எலிமினேஷன் உண்டா :  கஸ்தூரி கிண்டல்

சென்னை

மலஹாசன் கட்சியை பிக் பாஸ் டீம் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.  இதற்காக வெள்ளை நிறத்தில் ஆறு இணைந்த கரங்கள் மத்தியில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தனது கட்சிக் கொடியை அறிமுகப் படுத்தி உள்ளார்.   கமல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல கட்சித் தலைவர்களும்,  பிரபலங்களும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார்.  அதில் அவர், “மொத்த பிக் பாஸ் டீமும் களத்தில் உள்ளது.   சினேகன், வையாபுரி, ஸ்ரீப்ரியா,  விஜய்டிவி மகேந்திரன், உட்பட அனைவரும் உள்ள இந்த டீமுக்கும் விவோதான் ஸ்பான்சரா?  இந்த பிக்பாஸ் டீமில் எலிமினேஷன் உண்டா?”  என கிண்டாலாக கேட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி