கொரோனா பரவிய ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி.. என்ன செய்யறது வேற வழியில்ல..

செந்தமிழ் பாட்டு, இந்தியான் என பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் தற்போது, தெலுங்கு டிவி சீரியலில், ’இண்ட்டி குருஹலக்‌ஷ்மி’ மூலம் அறிமுகமாகிறார். இதில் துளசி வேடத்தில் நடிக்கிறார்.


குடும்பத்துக்காவே உழைத்து யாராலும் கவனிக்கப்படாமல் உலவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார் கஸ்தூரி. அவர் தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்றி ருக்கிறார். சில தினக்களுக்கு முன்புதான் இதே டிவி சிரியலில் நடிக்கும் ஹரிகிருஷ்ணா என்பவர் கொரோனா தொற்றால் பதிக்கப் பட்டார். இத்தொடர் ஷூட்டிங் சில தினங்கள் நிறுத்தி வைக்கப்பட நிலையில் மீண்டும் தொடங்கியது.
இதுபற்றி தெரிவித்திருக்கும் கஸ்தூரி, ’மங்களகரமாக ஷூட்டிங் தொடங்கியது, பாதுகாப்பு பற்றிய அச்சம் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது வேலை நடக்க வேண்டுமே..’ என இன்ஸ்டாவில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.