ஆதார் தீர்ப்பு: நடிகை கஸ்தூரி சொல்வது என்ன?

சென்னை:

தார் தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியது. அதில், தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது என்றும் ஆதார் கொண்டு வந்ததற்கான நோக்கம் சரியானது. அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்றும் கூறி உள்ளது.  அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்காக அவரது உரிமைகள் மறுக்கப்பட கூடாது.

செல்போன் இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றால், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பின்படி பார்த்தால்… மொத்தத்தில் அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் தேவை என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில பிரபல தமிழ் நடிகையும், சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி, ஆதார் தீர்ப்பு குறித்து தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், AadhaarVerdict வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு…

உச்ச நீதிமன்றம் இதைத்தான் கூறியுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்

கார்ட்டூன் கேலரி