பிரேமலதாவின் மீ டூ பேச்சு: நடிகை கஸ்தூரி   பதிலடி

வ்வொரு பெண்ணும் நெருப்பு மாதிரி இருந்தால் மீ டூ எப்படி வரும் என்று தே..மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கேட்டதற்கு நடிகை கஸ்தூரி, பதிலடி அளித்துள்ளார்.

சமீபத்தில் தே.மு..தி.க. பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். அப்போது பல விசயங்கள் குறித்து பேசிய அவர் மீ டூ குறித்தும் கருத்து தெரிவித்தார்.

கஸ்தூரி – பிரேமலதா

“ஒவ்வொரு பெண்ணும் நெருப்பு மாதிரி இருந்தால் மீ டூ எப்படி வரும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் பெண்கள் உள்ளனர். அவர்கள் தைரியமாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு பெண்ணாக சொல்கிறேன், பெண்கள் தங்களை உறுதியாக வளப்படுத்தி கொள்ள வேண்டும் மீ டு வை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் சர்ச்சையாக மாற்றுவது தவறு. பெண்கள் தைரியமாக இருந்தால் எதுவும் நடக்காது” என்றார்.

இது  குறித்து நம்மிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “ஒவ்வொரு பெண்ணும் நெருப்பு மாதிரி இருந்தால் மீ டூ எப்படி வரும் என்று பிரேமலதா கேட்கிறார். இது வெளயில் பேச நன்றாகத்தான் இருக்கும். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இது கு உங்கள் கணவர் விஜயகாந்திடம் கேட்டிருந்தாலே  புரிந்திருக்குமே” என்று தனது வழக்கமான சிரிப்புடன் சுருக்கமாக கூறினார்.

நடிகை கஸ்தூரி எங்க முதலாளி படத்தில் ஹீரோயனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed