அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ‘கைப்புள்ள’ ரேஞ்சில் கலாய்த்த கஸ்தூரி…

சென்னை:

ந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில், அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது மேலும் பரபரப்பை கூட்டியது.

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சை, வடிவேல் கைப்புள்ள காமெடி போல இருப்பதாக  கலாய்த்து  நடிகை கஸ்தூரி டிவிட் போட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

அனைத்து கட்சியினரையும் அவ்வப்போது டிவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து கலாய்த்து வருபவர் நடிகை கஸ்தூரி. இவரும் கமலைப்போலவே சில நேரங்களில் அதிமேதாவி தனமாக தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி நெட்டிசன்களால் வறுத்தக்கெடுக்கப்படுபவர்.

ஆனால், தற்போது கமலின் பேச்சுக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதிலை நக்கலாக கலாய்த்துள்ளார்.

அதில், “கமல் நாக்கு அறுபடும் ” என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்….கைப்புள்ள காமெடி தான் நினைவுக்கு வருது!” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வடிவேலுவின் பிரபல காமெடியான  கைப்புள்ள ரேஞ்சுக்கு கஸ்தூரி கலாய்த்துள்ளது  வைரலாகி வருகிறது.